கடற்படைத் தளபதி பாகிஸ்தான் கடற்படை யுத்த கல்லூரி மாணவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்
 

லாகூரில் அமைந்துள்ள பாகிஸ்தான்  கடற்படை யுத்த கல்லூரியில் கல்வி கற்கும் பாகிஸ்தான் நாட்டு மற்றும் நட்பு நாடுகள் ஆகியவற்றின்  மாணவ அதிகாரிகள் மத்தியில் நேற்று(15) இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள்  இலங்கை கடற்படையினர் “எதிரிகளுடன் யுத்தம் செய்தல் பற்றிய அனுவம்.” எனும் தலைப்பில் உரையாற்றினார்.

கடற்படைத் தளபதி இங்கு உரையாற்றுகையில்; உலக முழுவதிலும் இருந்து இக்கல்லூரியில் கல்வி கற்கும் எதிர் கால  கடற்படை தலைவர்கள் மத்தியில் உரையாற்றுதற்கு  ஓர் அரிய வாய்ப்பினை வழங்கிய குறித்த இக்கல்லூரியின் கட்டளைத் தளபதி  ரியர் அட்மிரல் மொஸ்ஸாம்  அவர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டதுடன் வைஸ் அட்மிரல் விஜேகுணரத்ன அவர்கள் 1995 ஆம் ஆண்டு குறித்த இக்கல்லூரியில் உயர் பாடநெறியினை தொடரந்த்தன் மூலம் ஏற்பட்ட நெருங்கிய தொடர்பினையும் நினைவு கூர்ந்தார்.

இலங்கை கடற்படை எவ்வாறு எதிரிகளுடன் சண்டையிட்டது மற்றும் சுமார் மூன்று தசாபதங்களாக நடைபெற்ற யுத்தத்தினை எவ்வாறு வெற்றி கொள்ளப்பட்டது எனபதினையும் அவர் இங்கு உரையாற்றுகையில் சுட்டிக் காட்டினார். 

இலங்கையின் நிலைமை, கடல் புலிப் பயங்கரவாதிகளின் வருகை, புலிப் பயங்கரவாதிகள் தற்கொலை  அச்சுறுத்தல், அவ்வாறான தாக்குதலின் போது  கடற்படையின் முறையடிப்பு, தற்கொலைத் தாக்குதல்கள் எவ்வாறு  தடுத்து நிறுத்தப்பட்டன, அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி  நடவடிக்கைகள், சிறிய படகு கருத்து மற்றும் புலிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியத்தினை அழித்தல் போன்ற விடயங்களை  அவர் மேலும்  இங்கு உரையாற்றுகையில் தெளிவு படுத்தினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பெறுமதியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதினை பாராட்டும் வகையில்   கடற்படை தளபதி அவர்களுக்கு விஷேட நினைவுச் சின்னம் வழங்கி  கௌரவிக்கப்பட்டது. இதேவேளை,  குறித்த இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் வைஸ் அட்மிரல் விஜேகுணரத்ன அவர்களினாலும் நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்படது.