கப்பல்களை பாதுகாக்கும் நடவடிக்கைளின் மூலம் அமெரிக்கா டொலர் 20 மில்லியன் வருமானம்
கப்பல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கடற்படையினர் 15 மாதங்களுக்கு முன்பாக பொறுப்பேற்றுக் கொண்டதன் மூலம் அமெரிக்க டொலர் 20 மில்லியனை வருமானமாக பெற்றுள்ளது. குறித்த இச் செயற்றிட்டத்தில் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் குழு பசிறப்பாக செயற்பட்டுள்ளனர்.
கடலில் கப்பல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாத நடுப்பகுதியில் குறித்த குழுவினர் பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டதன் காரணமாக 3 மில்லியன் ரூபா வருமானத்தினை பெற்றுக் கொள்ள முடிந்தது. கொழும்பு மற்றும் காலியின் அமைக்கப்பட்டுள்ள அலுவலகங்களுக்கிடையில் 8,200 கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கியதன் மூலம் குறித்த வருமானம் ஈட்டப்பட்டது. இதன்பிரகாரம், கடற்படை மதாம் ஒன்றுக்கு சுமார் 550 பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் மாதம் ஒன்றுக்கு சுமார் 200 மில்லியன் ரூபாவினை இலாபமாக பெற்றுக் கொண்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலுக் அமைய வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைள் இலங்கை கடற்படையினரால் மேற் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானங்கள் அனைத்தும் அரசின் ஒன்றினைந்த நிதியத்திற்கு நேரடியாக வைப்பு செய்யப்படுகின்றன.
வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் வர்த்தக கப்பல்களுக்கு ஆயிதங்கள், ரவைகளை விநியோகித்தல்,பெற்றுக்கொள்ளல் வெடிபொருட்கள் மற்றும் உபகரணங்கள் பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைளை இலங்கை கடற்படை முன்னெடுத்து வருகின்றது.