பாகிஸ்தானில் நடைபெறுகின்ற அமான்-2017 இறுதி நிகழ்வில் கடற்படைத்தளபதி பங்கேற்பு
 

பாகிஸ்தானில் நடைபெறுகின்ற அமான்-2017  கூட்டுப் பயிற்சியின் இறுதி நிகழ்வு பாகிஸ்தான், கராச்சியில் நேற்று(14)  இடம் பெற்றது. குறித்த இந் நிகழ்வில் கடற்படைதளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் கலந்து கொண்டார். இப்பயிற்சி இரண்டு வருடத்திற்கு ஒரு தடவை இடம்  பெறுகின்றது.அத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இவ் வருடத்திற்கான இப் பயிற்சி ஜந்தாவது தடைவையாக   வெற்றிகரமாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த இக் கூட்டு பயிற்சிக்கு கடற்படைத் தளபதி பிரதம அதிதியாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தார்

குறித்த இப் பயிற்சியின் இறுதி நிகழ்வாக சர்வதேச கடற்படை அணிவகுப்பு இடம்பெற்றது. நடைபெற்ற இந் நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் கௌரவ. நவாஸ் சரீப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து  சிறப்பித்தார்.குறித்த இப் பயிற்சியில் கலந்து கொண்ட  ஒன்பது நாடுகளின் கடற்படையின் சொத்துக்களுடன் கலந்து கொண்டிருந்தனர்.அத்துடன் இந்நிகழ்வில் இலங்கை கடற்படையின்   கடல் ரோந்துக் கப்பல்,சமுதுர கப்பல் ஆகியனவும் கலந்து கொண்டதுடன் அவுஸ்த்ரேலியா, சீன, இந்தோனிசியா,துருக்கி,ஜக்கிய இராச்சியம், அமெரிக்க யப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் மேற்பரப்பு மற்றும் ஏவுகணை துப்பாக்கி சூடு போன்ற நிகழச்சிகளும் செய்து காட்டப்பட்டன.தொடர்ச்சியாக ஜந்து நாட்கள்  நடைபெற்ற இப் பயிற்சி  பெப்ரவரி 10ஆம் திகதி ஆரமபித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.