கடற்படைத்தளபதி பல பாகிஸ்தான் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளுடன் சந்திப்பு
பாகிஸ்தானக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்படைதளபதி வைஸ்அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் அமான்-2017 கூட்டுப்பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றார். குறித்த இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ள கடற்படைத்தளபதி அவர்கள் பாகிஸ்தான் கடற்படையின் பல சிரேஷ்ட அதிகாரிகளை இன்று(13) சந்தித்தார். குறித்த இச்ந்திப்பின்போது கராச்சி கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் பரூக் அகமட், பாகிஸ்தான் கடற்படைப் பிரிவின் கட்டளைத்தளபதி வைஸ் அட்மிரல் சியாட் அரிபுல்லா ஹுசைனி,பிரதம கப்பற்கட்டும் தளம் மற்றும் என்ஜினியரிங் வேர்க்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ரியர் அட்மிரல் செயிட் ஹசான் நாசீர் சா ஆகியோரைச் சந்தித்தார்.
பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான உறவு பரந்த அடிப்படையிலான மற்றும் பன்முகத்தன்மை, இராஜதந்திரம், அரசியல், வணிக,மக்கள் தொடர்புகள் மற்றும் கலாச்சார பரிமாற்றம் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இச்சந்திப்பின் போது இரு நாட்டு பாதுகாப்பு உயர் மட்ட கடற்படை அதிகாரிகளுக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.இந்நிகழ்வில் இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகரும் கலந்து கொண்டார்.
Commander of the Navy calls on Commander Karachi, Rear Admiral Farrokh Ahmad |
Commander of the Navy calls on Commander Pakistan Fleet Vice Admiral Syed Arifullah Hussaini |
Commander of the Navy calls on Chief Executive Officer, Karachi Shipyard and Engineering Works (Limited), Rear Admiral Syed Hasan Nasir |