கடற்படைத்தளபதி காரச்சியிலுள்ள அலி ஜின்னா கல்லறைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்
 

பாகிஸ்தானக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்படைதளபதி வைஸ்அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள்  இன்று (13) காரச்சியிலுள்ள தேசிய  அலி ஜின்னா  எனும் பிரபல்யமான கல்லறைக்கு  கடற்படைத்தளபதி அவர்கள்  விஜயமொன்றினை மேற்கொண்டார். குறித்த இவ்விஜயத்தின்போது இக்கல்லறைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.குறித்த இக்கல்லறை பாகிஸ்தானை தோற்றுவித்த  முகம்மது அலி ஜின்னா அவர்களின் இறுதியாக ஓய்வெடுக்கும் இடம் என கருதப்படுகின்றது .

குறித்த வரலாற்று சிறப்பு மிக்க கல்லறை 1960 ஆம் ஆண்டு பூரணப்படுத்தப்பட்டது.இக்கல்லறை  உலக பூராகவும் ஒரு சிறந்த அடையாளச்சின்னமாக  காணப்படுகின்றது. அத்துடன் இக்கல்லறை வெளிநாட்டு பார்வையாளர்கள் மத்தியில் ஒரு பிரபல்யமான சுற்றுலாத்தளமாகவும் கருதப்படுகின்றது.அத்துடன் பல்வேறுபட்ட உத்தியோகபூர்வ மற்றும் இராணுவ நிகழ்வுகளும் இங்கு இடம் பெறுகின்றமை ஒரு சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான  பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராயை பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இரு நாட்டு கடற்படை அதிகாரிகள் ஆகயோர் கலந்து கொண்டனர்.