பாகிஸ்தானில் நடைபெறுகின்ற அமான்-2017 நிகழ்வில் கடற்படைத்தளபதி பிரதம அதிதியாக பங்கேற்பு
 

பாகிஸ்தானக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்படைதளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் அங்கு நடைபெற்ற இரு முக்கிய நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.  7வது கடல்சார் மாநாடு, சர்வதேச இசைக்குழுக்களின் காட்சி மற்றும் கடல்சார் தீவிரவாத செயல்முறைக் காட்சி போன்ற  நிகழ்வுகள் நேற்று (11) அமான்-2017  கூட்டுப் பயிறடசியின்போது  நடைபெற்றன. 

குறித்த இந் நிழ்வில் கலந்து கொள்ளும்  முன்னர் வைஸ் அட்மிரல் விஜேகுணரத்ன அவர்கள்  பாகிஸ்தான் கடற்படை பிரதானி அட்மிரல் சக்காவுல்லா  அவர்களை சந்தித்தார். அத்துடன் குறித்த அதிகாரிகளுக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த    விடயங்கள்  தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. அத்துடன்  நடை பெற்றுக் கொணடிருக்கின்ற  நிகழ்வுகளுக்கு அட்மிரல் சக்காவுல்லா அவர்களினால் வைஸ் அட்மிரல் விஜேகுணரத்ன அழைத்துச் செல்லப்பட்டார்.

வாத்திய இசைக்  காட்சியினைத்   தொடர்ந்து  பாகிஸ்தான கடல்சார் தீவிரவாத செயல்முறைக் காட்சிபாக்கிஸ்தான் கடற்படை சிறப்பு நடவடிக்கை படைகள் மற்றும் கலந்து  கொண்ட நாடுகளின் படை வீரர்கள் ஆகியோரினால் செய்து காட்டப்பட்டன.

இதேவேளை,7 வது சர்வதேச கடல் மாநாடு(அய்எம்சீ 2017)  பெப்ரவரி 11 தொடக்கம் 13 வரை கராச்சி, பஹாரிய பல்கலைக்கழகம், என்சீஎம்பீஆர் இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் முதல் கட்ட நிகழச்சி  நேற்று வெற்றிகரமாக  நிறைவடைந்தது.இந்நிழ்வில் சுமார்  முப்பத்தி ஜந்து கடற்படையினர் தலைசிறந்த பேச்சாளர்கள்,  மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டமை ஒரு சிறப்பம்சமாகும். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து  கொண்ட கடற்படை தளபதி அவர்களினால் புத்தி ஜீவிகள் மத்தியில்  உரையாற்றிமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாகிஸ்தான் கடற்படை பிரதானி,  வெளிநாட்டு பிரதிநிதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான அத்திகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Commander of the Navy calls on Chief of the Naval Staff of the Pakistan Navy

International Bands Display and Maritime Counter Terrorism Demonstration

The 7th International Maritime Conference