சீன கடற்படையின் கடல் ஆராய்ச்சிக் கப்பலான “க்வ்யேன் சன்ஷின்ங்” கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
எரிபொருள் தேவை மற்றும் தொழில்நுட்ப நிறுத்தமாக சீன கடற்படையின் கடல் ஆராய்ச்சிக் கப்பலான “க்வ்யேன் சன்ஷின்ங்” இன்று (01) காலையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகைதந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர். கப்பல் துறைமுகத்தை வந்தடைந்த பின் அதின் கட்டளை அதிகாரி லெஃப்டினென்ட் கமாண்டர் யங் ஹெய்டொ அவர்கள் மேற்கு கடற்படைக் கட்டளை தலைமைகைத்தில் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல அவர்களை சந்தித்து பேசினார். அங்கு அவர்கள் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு குறித்து நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அங்கு அவர்கள் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு குறித்து நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. “க்வ்யேன் சன்ஷின்ங்” கப்பல் இம் மாதம் 06 திகதி வரை இலங்கையில் தங்கி இருக்கும்.