அனுராதபுரம் சென் ஜோசப் கல்லூரியின் நிருவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோறு திட்டமாக நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுவது குறிப்பிடலாம்.அதன் படி அனுராதபுரம் சென் ஜோசப் கல்லூரியின் நிருவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (25) வடமத்திய கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் மெர்ரில் விக்கிரமசிங்க அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
நிறுவப்பட்டுள்ள நீர்சுத்திகரிப்பு நிலையம் மூலம் பாடசாலையில் கல்விகக்கும் 3250 மாணவர்கள், 138 ஆசிரியர்கள் மற்றும் 24 கல்விசாரா ஊழியர்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். இதுக்காக கடற்படை சமூக நலச் நிதியம் நிதி அனுசரணை வழங்கும். இந்த சமூக நலத் திட்டம் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு தன்னுடைய அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை சாதகமாக பயன்படுத்தி குறுகிய நேரத்துக்குள் குறைந்த செலவின் அமைக்கப்பட்டுள்ளனர்.
இது வரை 113 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 50,455 குடும்பங்களுக்கு மற்றும் 43,850 மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல சமூக சேவைகள் இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்ளப்படும்.இன் நிகழ்வுக்கு வனக்கத்தக்கூறிய மகா சங்கத்தினர், பிரதேச கிரிஸ்துவர் ஆலயத்தின் அருட் தந்தை, சென் ஜோசப் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மூத்த கடற்படை அதிகாரிகள், வீரர்கள், பாடசாலையில் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உட்பட பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.