ஐந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோறு திட்டமாக நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுவது குறிப்பிடலாம்.

சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் பிரதேசங்களின் மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்திசெய்து இந்த நோய் நாட்டின் அகற்ற கடற்படை முன்நின்று வழிநடத்துகிறார்கள். அதின் இன்னோறு திட்டமாக பதவிய அளகிம்புலவ சேதியகிரி ரஜமகா விகாரை, வவுனியா மடுகந்த, பொளிபிதிகம தலாவ, பல்லேகல மற்றும் பொத்துவில் ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட 05 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று (23) மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கபபட்டது.

நிறுவப்பட்டுள்ள நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் தலாவையில் 450 குடும்பங்களும், மடுகந்தவில் 400 குடும்பங்களும், சேதியகிரி ரஜமகா விகாரையில் தரித்துள்ள பௌத்த துறவிகள் மற்றும் அதனைச் சூழவுள்ள 350 குடும்பங்களும்,பல்லேகளவில் 600 குடும்பங்களும், பொத்துவில்லில் 680 குடும்பங்களும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். மேலும், சேதியகிரி ரஜமகா விகாரையில் நிறுவப்பட்ட நீர்சுத்திகரிப்பு நிலையத்திற்கான நிதி அனுசரணை புத்த சாசன அமைச்சினால் வழங்கப்பட்ட அதேவேளை இதர நீர்சுத்திகரிப்பு நிலையங்கள், சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் நிதி அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்டன.

இந்த சமூக நலத் திட்டம் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு தன்னுடைய அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை சாதகமாக பயன்படுத்தி குறுகிய நேரத்துக்குள் குறைந்த செலவின் செய்யப்படும். இது வரை 112 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 50,455 குடும்பங்களுக்கு மற்றும் 40,600 மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல சமூக சேவைகள் இலங்கை கடற்படை மூலம் நடத்தப்படும். அது அபாயகரமான சிறுநீரக நோய் இலங்கையின் அகற்ற உதவாகும்.