அமெரிக்க கடற்படையின் “ஹொபர்” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க கடற்படையின் “ஹொபர்” கப்பல் இன்று (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகைதந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.. கப்பல் துறைமுகத்தை வந்தடைந்த பின் அதின் கட்டளை அதிகாரி கொமான்டர் ஜான் டி கெயினி அவர்கள் மேற்கு கடற்படைக் கட்டளை தலைமைகைத்தில் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா அவர்களை சந்தித்து பேசினார். அங்கு அவர்கள் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு குறித்து நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

04 நாட்கள் அதிகாரப்பூர்வ விஜயத்துக்கு வந்த இப் கப்பலின் பணிக்குழுவினர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் போது இலங்கை கடற்படையினர் ஏற்பாடுசெய்யும் சில கடற்படைப் பயிற்சிகளுக்கும் பங்கேற்க உள்ளனர்.அதன் படி கடற்படை பயிற்சி திட்டங்கள் மற்றும் கடற்படை விளையாட்டு அணிகளுடன் வெலிசறை கடற்படை முகத்தில் சில கிரிக்கெட், பேஸ்பால், கைப்பந்து மற்றும் கூடைப்பந்து ஆட்டங்களின் பங்கேற்பார்கள். குறித்த இக்கப்பல் இம்மாதம் 23ம் திகதி புறப்படவுள்ளது.