சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 மீனவர்கள் கடற்படையால் கைது.
இலங்கை கடற்படை கப்பல் கலனி நிருவனத்தின் கிடைத்த புலனாய்வு தகவல் படி கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் நீர்கொழும்பு துணை நிலையத்தின் வீர்ர்களால் நேற்று (10) நீர்கொழும்பு பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினறால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன் ஒரு டிங்கி படகு,ஒரு தனியிலை வலை மற்றும் பிடிக்கப்பட்ட 50 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருள்களும் நீர்கொழும்பு கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.
அதே தினம் நீர்கொழும்பு குட்டிதூவ பகுதியில் சட்டவிரோதமாக கடல் ஆமை இறைச்சி விற்பனை செய்த இருவர் இலங்கை கடற்படை கப்பல் கலனி நிருவனத்தின் வீர்ர்களால் மற்றும் நீர்கொழும்பு கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் வீரர்களால் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 71 கிலோகிராம் கடல் ஆமை இறைச்சி மற்றும் ஆமை முட்டைகளும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் கடல் ஆமை இறைச்சி மற்றும் ஆமை முட்டைகளும் நீர்கொழும்பு கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.