புதிய அதிகாரிகலுக்கு நியமனம் கடிதங்கள் வழங்கப்பட்டன
இலங்கை கடற்படையின் 59வது ஆட்சேர்ப்பின் 28 கடேட் அதிகாரிகளுக்கு மற்றும் 2017 வருடம் முதல் நேரடி நுழைவின் 27 அதிகாரிகளுக்கு நியமனம் கடிதங்கள் வழங்கும் விழா இன்று (6) இலங்கை அரசாங்க கூட்டு தலைமை ஹய்ட்ரோகெபர் அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் தனிநபர் ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி அவருடய தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பிராக்கிரம நிருவனத்தின் அட்மிரல் சோமரத்ன திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அதன் படி கடேட் அதிகாரிகள் நிறைவேற்று, பொருட்கள் வழங்கல், ஒழுக்கம் பாதுகாப்பு, பொறியியல், மின் மற்றும் மின்னணு துறைகளில் மற்றும் இராணுவ வீரன் ஆகும் அம்சங்களினும், நேரடி நுழைவு அதிகாரிகள் தன்னார்வலர், பொருட்கள் வழங்கல், இசைக்குழு மற்றும் பல் துறைகளில் கடற்படை சேவைக்கு சேர்ந்தார்கள். அங்கு உரையாற்றிய ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி அவர்கள் முதலாக புதிய கேடட் அதிகாரிகளுக்கு அவரது வாழ்த்துகள் தெரிவித்தார். ஒரு கடற்படை அதிகாரியாக எதிர்காலத்தில் தமது கடமைகளை தாய் நாட்டுக்கு செய்வதும், கடற்படை புகழ் மற்றும் அடையாளத்தை பாதுகாத்து ஒரு கெளரவமான சேவையின் ஈடுபட வேன்டும் என கூறினார். ஒழுக்கமான கடற்படை அதிகாரியாக தமது கடமைகளை நிறைவேற்றி எதிர்காலத்தில் சிரேஷ்ட அதிகாரி வரை தங்களுடைய கடற்படை வாழ்க்கை முன்னோக்கி நகர்த்துக்கு பல வழிமுறைகள் அவர் அவர்களுக்கு வழங்கினார்.
மேலும், தன் தாய்நாட்டுக்கு சேவை செய்ய தங்களது பிள்ளைகளை கடற்படைக்கு கையளிக்கப்படுவது சம்பந்தமாக அனைத்து கடற்படையினர்களும் ஐந்து அவர்களுடைய பெற்றோர்களுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.