இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் மற்றொரு திட்டம் இன்று (31) முடிவு செய்யப்பட்டது.அதன் படி ராஜாங்கனய யாய 05 கிராமத்தில் மற்றும் மத்துகம மருத்துவமனையில் நிருவப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.
மத்துகம மருத்துவமனையில் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழாவுக்கு கடற்படை தளபதியின் அழைப்பின் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன உடனிருந்தார்.இது மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மற்றும் மருத்துவர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்களுக்கும் தன்னுடைய சுத்தமான குடிநீர்தேவை அடைய முடியும். இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் தயாரிக்க நிதி பங்களிப்பு கடற்படையின் ஒருவர் ரூ 75 பணம் தன்னார்வ விருப்பின் கடற்படை சமூகத்தின் நிதியத்துக்கு வழங்கப்படும்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், கடற்படை மூலம் இது வரை ஒரு ஆண்டு காலத்தில் செய்யப்பட்ட சமூக சேவைக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். குறைந்த செலவில் அறிவு மற்றும் தொழில்நுட்ப திறன் சாதகமாக பயன்படுத்தி சிறுநீரக நோய் இலங்கையின் அகற்ற ஈடுபடும் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு நாட்டில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கு உதாரணம் என்று மேலும் கூறினார்.இன் நிகழ்வுக்கு மகா சங்கத்தினர், உள்நாட்டு அலுவல்கள், மேற்கத்திய அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள், பிரதி அமைச்சர்,கெளரவ பாலித தேவரப்பெரும அவர்கள் மத்துகம மாகாண சபை அமைச்சர் திரு ஜகத் பின்னகொட விதான அவர்கள், கடற்படைத் தளபதி, கடற்படைத் தளபதியின் தாயான திருமதி டொடி விஜேகுனரத்ன, விஐபி நபர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், மருத்துவர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்கள் கழந்துகொன்டனர்.
தலாவ பகுதியில் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஜனாதிபதி சிறுநீரக நோய் திரையிடல் செயலணியின் நிதியுதவிவுடன் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு அதன் தொழில்நுட்ப அறிவு பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் சுமார் 500 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படுகிரது.
சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப் பிரதேசங்களில் மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்திசெய்வதக்கு பெரிய முயற்சிகள் எடுத்து வருகின்ற கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு இது வரை 82 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசங்களில் நிருவப்பட்டு 37,000 குடும்பங்களுக்கு மற்றும் 28,000 மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படுகிரது. எதிர்காலத்திலும் இத்தகைய பல சமூக சேவைகள் இலங்கை கடற்படை மூலம் நடத்தப்படும். இன் சமூக சேவை நாட்டின் பிற முகவர் மற்றும் துறைகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாகிவிட்டது. இந்த சமூக திட்டம் மூலம் கொடிய சிறுநீரக நோய் இலங்கையின் அகற்ற ஒரு பெரிய உதவியாக இருக்கிரது.