சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு மீனவர்கள் கைது.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு நபர்கள் இருவரை வெவ்வேறு இடங்களில் வைத்து நேற்று (29) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி கிழக்கு கடற்படை கட்டளை வாகரை இலங்கை கடற்படை கப்பல் காஷ்யபவின் வீரர்களினால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது தெட்டத்தீவு கடற் பகுதியில் மீனவர்களுடய மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன் திருடிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு ஒரு கண்ணாடியிழை படகு மற்றும் பிடிக்கப்பட்ட 85 கிலோகிராம் மீன்கள் கைது செய்யப்பட்டுள்ளதன. அத்துடன் குறித்த சந்தேக நபர்களும் பொருள்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக கலவான்சிகுடி காவல் நிலையத்திக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அதே தினம் வடக்கு கடற்படை கட்டளை மாதகல் இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிருவனத்தின் வீர்ர்களால் மார்சன்குடால் கடல் பகுதியில் தனியிலை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது ஒரு கண்ணாடியிழை படகு,ஒரு தனியிலை வலை ஆகியன கைப்பற்றப்பட்டன. அத்துடன் குறித்த சந்தேக நபர்களும் பொருள்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.