சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 மீனவர்கள் கடற்படையால் கைது.
வெடிபொருட்கள் மற்றும் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 உள்நாட்டு மீனவர்கள் இரண்டு இடங்களில் நேற்று (23) கடற்படையினராள் கைது செய்யப்பட்டனர்.
வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிடிய இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் சிலாவதுர கடல் பிரதேசத்தில் சரியான மீன்பிடி உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக கடல் வெள்ளரிகள் பிடித்த 16 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 03 படகுகள், 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள் ,04 சுழியோடி முகமூடிகள் 04 சோடி சுழியோடி காலணிகள் 02 ஜிபிஎஸ் இயந்திரங்கள்,01 தனியிழை வலை மற்றும் பிடிக்கப்பட்ட 16 கிலோ கிரேம் கடல் வெள்ளரிகள் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருள்களும் மன்னார் கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வடமத்திய கடற்படை கட்டளை மன்னார் இலங்கை கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் சவுத்பார் கடல் பிரதேசத்தில் சட்டவிரோதமான வெடிப்பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 01 படகு, ,05 சுழியோடி முகமூடிகள் 05 சோடி சுழியோடி காலணிகள் மற்றும் பிடிக்கப்பட்ட 610 கிலோ கிரேம் மீன்களும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருள்களும் மன்னார் கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.