இரண்டாவது உயர் தொழில்நுட்ப கப்பல் மீண்டும் வெளியீடு பாதையிக்கு எடுக்கப்படும்.
இலங்கை கடற்படைக்கு தயாரிக்கப்படும் ஆழ்கடல் பகுதி கண்காணிக்கும் உயர் தொழில்நுட்ப கப்பல் வெளியீடு இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமிடத்தின் நடைபெற்றது. இப் கப்பல் மீண்டும் வெளியீடு பாதையிக்கு எடுப்பது இலங்கை கடற்படையில் பணியாளர்களின் துணைத் தலைவர் மற்றும் தன்னார்வ கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நீல் ரொசய்ரோ அவர்கள் தலமையில் நேற்று (16) நடைபெற்றது. இந்த நிலையில் மீதி வேலையை தொடங்கும் இப் கப்பல் இலங்கை கடற்படைக் கப்பல் “சிந்துரல” என்ற பேரில் குறிப்பிடபடும். நவீன தொழில்நுட்பம் பெற்றிருக்கும் இப் உயர் தொழில் நுட்ப கப்பல் கோவா கப்பல் நிறுவனத்தின் தயாரிக்கப்பட்ட 100 வது கப்பலாக பதிவு செய்யப்படும்.
இங்கு இலங்கை கடற்படைத் தளபதி சார்பாக பேசிய ரியர் அட்மிரால் நீல் ரொசய்ரோ அவர்கள் இப் கப்பல் கட்டுமிடத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சேகர் மிடல் உட்பட குழுவினருக்கு தனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்தார். இன் நிகழ்ச்சிக்காக மின்சாரம் மற்றும் மின்னணு பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் வசந்த பெர்னாண்டோ அவர்கள், கடற்படை உள்ளூர் வாங்குதல் இயக்குனர், கொமடோர் தர்மப்பிரிய விஜேதுங்க அவர்கள், பொறியியல் சேவைகள் பணிப்பாளர் கொமடோர் கபில டி சில்வா அவர்கள்,மற்றும் கொமான்டர் மதுஷங்க முதுன்பிடகே அவர்களும் கழந்துகொன்டன.