இன்னும் இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம் முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக பலபிட்டிய கொஸ்கொட கிராமத்தில் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நேற்றுமுன் தினம்(13) திறந்து வைக்கப்பட்டது.

இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் கொஸ்கொட கிராமத்தில் 150 குடும்பங்கள் மற்றும்  முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் 650 அதிகாரிகளுக்கு சுத்தமான குடிநீர் வசதி கிடைக்கும். இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஜனாதிபதி சிறுநீரக தடுத்தல் செயலணி மற்றும் சிரச தொலைக்காட்சியிள் கம்மெத்த சமூக பொறுப்புணர்வுடாக பிரென்டெக்ஸ் பிளஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவப்பட்டுள்ளது. சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசங்களில் இவ்வகையான நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் தேவை அதிகமாக காணப்படுகிறது. கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் பகுதிகளில் 65 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது இந்த திட்டத்துக்கு இணையாக கடற்படையினர் மூலம் சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் பகுதிகளில் மக்கள் விழிப்புணர்வு உயர்த்தல் திட்டமூம் நடத்தப்படுகிறது.