ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் மற்றும் கடலில் அடித்துச்செல்லப்பட்ட நால்வர் கடற்படையினரால் மீட்பு
அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்தை விட்டு மீன்பிடிக்க புறப்பட்ட “ஜீவன்த புதா” மீன்பிடி கப்பலில் ஒரு மீனவரை சிகிச்சைக்காக அவசரமாக கரைசேர்க்க கடற்படை நேற்று (14) உதவியளித்தது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் அறிவித்தலின் படி உடனடியாக கடற்படையினர் இலங்கை கடற்படை கப்பல் சுரனிமல மூலமாக நோயாளி ஏற்றிச் சென்று பி 411 வேக தாக்குதல் கப்பலுக்கு கையளிக்கப்பட்டது. அதன்பிறகு நோயாளி இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின நிறுவனத்துக்கு கொன்டுவந்த பின் உடனடி மருத்துவ சிகிச்சைக்காக காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதே நாளில் கோபாலபுர கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர், கடற்படை கப்பல் விஜயபா வின் வீரர்கள் உட்பட கரையோர பாதுகாப்பு படையின் உயிர்காப்பு வீரர்கள் ஒன்றிணைந்து நேற்று (14) மீட்டனர். மீட்கப்பட்ட நால்வரும் கண்டி அக்குரணை சேர்ந்த 40,32.30, மற்றும் 14 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் உடனடி மருத்துவ சிகிச்சையாக நிலாவெளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.