இலங்கை கடற்படை நடைமுறை படப்பிடிப்பு அணி ஆசியா பசிபிக் ஹேன்ட்கன் போட்டியில் சிறந்த திறன்களை காட்சிகளுக்கும்
 

பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு போட்டியில் படப்பிடிப்பு சாம்பியன்களான இலங்கை கடற்படை படப்பிடிப்பு அணி 2016 டிசம்பர் 7 திகதி இருந்து 11 திகதி வரை தாய்லாந்து பட்டாயாவில் நடத்தபட்ட ஆசியா பசிபிக் ஹேன்ட்கன் போட்டியில் கலந்து கொன்டது. இப் போட்டிகளுக்காக 17 நாடுகளின், சுமார் 300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டிகளுக்கு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பொது படப்பிடிப்பு சாம்பியன்களும் கலந்துகொன்டனர்.

இலங்கை கடற்படை பெண்கள் படப்பிடிப்பு அணி பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட பெண்கள் சிறிய அதிகாரி டபிள்யூ ஜி எஸ் பிரியதர்ஷினி, பெண்கள் தலைவரான யு எஸ் ரொட்ரிகோ, பெண்கள் தலைவரான டபிள்யூ எம் ஆர் குமாரி திறந்த பிரிவின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் முறையே வெற்றி பெற்றனர். தலைவரான ஆர் டி எஸ் பிரேமஷான்த ஆண்கள் ச்டான்டட் பிரிவின் வெள்ளி பதக்கத்தை வெந்றார். பெண்கள் தலைவரான யு எஸ் ரொட்ரிகோவுக்கு சர்வதேச படப்பிடிப்பு நடைமுறை கூட்டமைப்பு தலைவர் மூலம் ஒரு சிறப்பு மரியாதை என வழங்கபட்ட தங்க பதக்கத்தை இன் நிகழ்வில் ஒரு மைல்கல்லாகியது.