62 வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கப்பட்டது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம் முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவப்பட்டுள்ள மூன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று(04) திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம் முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக புத்தளம் பொலிஸ் நிலையம், வவுனியா கட்டிகுலம் பகுதி, மகியங்கனை இகிரியகொட இளநிலை கல்லூரியில் இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறக்கப்பட்டது. இந்த 03 இயந்திரங்களுடன் கடற்படை இன்று வரை நாடு முலுவ 62 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் நீரை சுத்திகரித்து வழங்கும்.
சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசங்களில் இவ்வகையான நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் தேவை அதிகமாக காணப்படுகிறது. கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி மிக குறைந்த செலவில் இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டது. புத்தளம் பொலிஸ் நிலையத்தில் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரத்துக்கு பொலிஸ் தலைமையகத்தில் நிதியுதவி வழங்கப்பட்டது. கட்டிகுலம் பகுதி நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரத்துக்கு சிரச தொலைக்காட்சியிள் கம்மெத்த சமூக பொறுப்புணர்வின் கீழ் கபோ டிரச்ட் நிருவனம் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டது. இகிரியகொட இளநிலை கல்லூரியில் நீர் சுத்திகரிப்பு இயந்திரத்துக்கு ஜனாதிபதி சிறுநீரக நோய் தடுத்தல் செயலணி நிதியுதவி வழங்கியது.
இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் 450 அதிகாரிகளுக்கும், வவுனியா கட்டிகுலம் பகுதியில் 345 குடும்பங்கள் மற்றும் இகிரியகொட இளநிலை கல்லூரியில் 150 மாணவர்கள், 11 ஆசிரியர்கள் 412 குடும்பங்களும் பயனடையும். தென்கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவருடய நேரடி மேற்பார்வையின் கீழ் கடற்படை சிவில் இன்ஜினியரிங் துறையில் அதிகாரிகள் மற்றும் வீரர்களுடய பங்களிப்புடன் இகிரியகொட இளநிலை கல்லூரியில் இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவுதக்கு கட்டிடம் கட்டப்பட்டன.