இலங்கை கடற்படை யாழ் வைத்தியசாலையில் சுத்தமான குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கும்.
 

சிறுநீரக நோய் தடுக்கும் மீது ஜனாதிபதி செயலணியின் இணையாக சிறுநீரக நோய் தடுப்பிற்கான பாரிய செயற்பணியின் முன் பயணராக இருக்கும் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு மூலம் உருவாக்கப்பட்டு நிறுவப்பட்ட 56வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் இன்று(01) யாழ்ப்பாண வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வின்போது மக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், மருத்துவர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.

மேலும், இது மூலம் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, மருத்துவர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்களுக்கு மற்றும் பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். சிறுநீரக நோய் வேகமாக பரவி வருகின்ற இப் கால பகுதியில் இந்த நோய் அகற்றுவதற்காக வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுடைய வழிகாட்டுதலின் கீழ் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு மூலம் மிக குறைந்த செலவில் இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உற்பத்தி வருகிரது. மற்றும் இப் நடவடிக்கைகள் ஆரம்பித்து இம் மாதம் 22ம் திகதிக்கி ஒரு வருடமாகும்.

கடற்படை சமூக சேவைகள் நிதியம் மூலம் ஆரம்பித்த இப் சமூக சேவை மூலம் இன்று 28,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் 20,000 க்கு அதிகமான பாடசாலை மாணவர்களுக்கும் சுத்தமான குடிநீர் இலவசமாக வழங்கபடுகிறது. கடற்படையினரின் நிதி உதவியுடன் ஆரம்பித்த சமூக வர்த்தக நிதியம் மூலம் தயாரிக்கும் இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டில் சிறுநீரக நோய் பறவும் 11 மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள மக்கள் இது மூலம் இலவச குடிநீர் பயன்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் 56 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கடற்படைறாள் நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ளன. இயந்திரங்கள் தீவிரமாக வைத்து மக்களுக்கு சுத்தமான நீரை வழங்குவதில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் செயல்திறனை நிரூபிக்கும்.

இன்று(1) மக்களுக்கு திறந்து வைக்கப்பட்ட இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவதுக்கு வேன்டிய கட்டிடம் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவர்களின் மேற்பார்வையின் கீழ் கடற்படை சிவில் இன்ஜினியரிங் துறையில் அதிகாரிகள் மற்றும் வீரர்களுடய பங்களிப்புடன் நிருவப்பட்டன.