மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய எண்ணக்கருத்திற்கிணங்க சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி ஊடாக தலையீட்டு இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இம் முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக மெதிரிகிரிய பிரதேசத்தில் அபயபுர மற்றும் செனரத்புர கிராம மக்களுக்காகவும் கெகிராவ பிரதேசத்தில் படிகாரம்மடுவ கிராமத்திற்கும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நேற்று (25) திறந்து வைக்கபட்டது.
மெதிரிகிரிய பிரதேசத்தில் அபயபுர மற்றும் செனரத்புர கிராமங்களில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொழும்பு, காலி முகத் ஹோட்டல் நிதி பங்களிப்பு வழங்கியது.மற்றும் கெகிராவ பிரதேசத்தில் படிகாரம்மடுவ கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சிரச கம்மெத்த திட்டத்தின் நிதி பங்களிப்பு வழங்கியது.
அபயபுர மற்றும் செனரத்புர கிராமங்களில் 400 குடும்பங்கள் மற்றும் 500 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது அடையாளமிடப்பட்டு சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் திரு அசேல இத்தவெல அவர்கள், அவரது மனைவி மற்றும் காலி முகத் ஹோட்டல் ஆளுநர் திரு சஞ்சீவ் கார்டினர் அவர்கள் மூலமாக சுப முகூர்த்தத்தில் தொடங்கியது.
மேலும் படிகாரம்மடுவ கிராமத்தில் 400 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பதற்கு நிதி பங்களிப்பு வழங்கிய சிரச கம்மெத்த திட்டத்தின் ஊழியர்கள் மற்றும் தேசிய லொத்தர் சபையின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி யசந்த கருனாரத்ன அவர் உட்பட சிறந்த விருந்தினர்கள் கலந்துகொன்டன.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் தன்னுடய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவி பயன்படுத்தி 11 மாவட்டங்களில் பரவி உயிர்கொல்லும் சிறுநீரக நோய் தடுப்பதுக்கு மகத்தான முயற்சி முன்னோடியாக எடுத்து வருகிறார். சிறுநீரக நோய் பரந்தளவில் காணப்படுகின்ற நாட்டின் பல பகுதிகளில் இதுவரை 55 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. நிறுவப்பட்டுள்ள மொத்த நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் 24 மணி நேரமும் செயல்படுத்தி சுத்தமான குடிநீர் வழங்கும்.
7வது காலி உரையாடல் சர்வதேச கடல் மாநாடு கொழும்பில் நடைபெறும்.