"சமர்செட்" கப்பலிள் கட்டளை அதிகாரி கிழக்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு

பயிற்சி விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம்(22) இலங்கையை வந்தடைந்த அமெரிக்க கடற்படையில் சேர்ந்த ‘சமர்செட்’ கப்பலில் கட்டளை அதிகாரி கேப்டன் டேரன் க்லாசர் அவர்கள் கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னையா அவர்களை இன்று(23) கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இச்சந்திப்பின் போது கப்பலின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.