50 வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கபட்டது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவப்பட்ட 06 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று(10) திறக்கபட்டது. மகியங்கனை உல்ஹிடிய மகா வித்தியாலயம், ஹத்தத்தாவ மகா வித்தியாலயம்,அலுயடவெல மகா வித்தியாலயம்,ஹெபரவ மகா வித்தியாலயம் மற்றும் அனுராதபுர பிரதேசத்தில் பஹமுனேகம,வாஹல்கட ரஜமகா விஹாரங்களில் இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறக்கபட்டது. இப் இயந்திரங்களுடன் இன்று வரை 50 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கடற்படையினர் மூலம் நாடு முழுவதும் துவங்கப்பட்டது. இப் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 18,517 க்கு அதிகமான பாடசாலை மாணவர்களுக்கும் 25,215 க்கு அதிகமான குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீர் இலவசமாக வழங்கபடுகிறது.
இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஜனாதிபதி சிறுநீரக நோய் தடுத்தல் செயலணியின் நிதியுதவியுடன் குறுகிய காலத்திற்குள் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவப்பட்டுள்ளன. சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசங்களில் இவ்வகையான நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் தேவை அதிகமாக காணப்படுகிறது. கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி மக்களுக்கு அடைய வேண்டிய சுத்தமான குடிநீர் வழங்குவதுக்கு கடுமையாக போராடி வருகின்றனர்.
இவ்வியந்திரத்திரங்கள் மூலம் உல்ஹிடிய மகா வித்தியாலயத்தில் 915 மாணவர்களுக்கும் 43 ஆசிரியர்களுக்கும் இப் பிரதேச 535 குடும்பங்களுக்கும், ஹத்தத்தாவ மகா வித்தியாலயத்தில் 802 மாணவர்களுக்கும் 42 ஆசிரியர்களுக்கும் இப் பிரதேச 535 குடும்பங்களுக்கும், அலுயடவெல மகா வித்தியாலயத்தில் 450 மாணவர்களுக்கும் 30 ஆசிரியர்களுக்கும் இப் பிரதேச 300 குடும்பங்களுக்கும், ஹெபரவ மகா வித்தியாலயத்தில் 350 மாணவர்களுக்கும் 22 ஆசிரியர்களுக்கும் இப் பிரதேச 400 குடும்பங்களுக்கும்,தபுத்தேகம மற்றும் பஹமுனெகம பகுதிகளில் 375 குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கபடுகிறது.
வாஹல்கட ரஜமகா விஹாரயத்தில் தேரரால் சிறுநீரக நோயாளிகளுக்கு மற்றும் புற்று நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சைகள் வழங்கபடுகிறது. இந் விஹாரயத்தில் கிட்டத்தட்ட 2000 நோயாளிகள் குடியிருப்பதனால் அவர்கலுடய குடி நீர் பிரச்சினையை தீர்க்க கடற்படை தளபதிவுடய வழிமுறைகளுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டு சுத்தமான குடிநீர் இலவசமாக வழங்கபடுகிறது.
வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க மற்றும் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் கடற்படை சிவில் இன்ஜினியரிங் துறையில் அதிகாரிகள் மற்றும் வீரர்களுடய பங்களிப்புடன் இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவுதக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டன.