கடற்படையினால் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரத்தில் திறந்து வைப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் கொக்மாதுவ மற்றும் புஹுலேவெவ பிரதேச மக்களின் நன்மை கருதி இரன்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இந்று (07) திறந்து வைக்கப்பட்டது.
இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஜனாதிபதி சிறுநீரக நோய் தடுத்தல் செயலணியின் நிதியுதவியுடன் குறுகிய காலத்திற்குள் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவப்பட்டுள்ளன. வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்களில் நேரடி மேற்பார்வையின் கீழ் கடற்படை சிவில் இன்ஜினியரிங் துறையில் அதிகாரிகள் மற்றும் வீரர்களுடய பங்களிப்புடன் இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவுதக்கு 2 கட்டிடங்கள் கட்டப்பட்டன.
இவ்வியந்திரத்தின் மூலம் கொக்மாதுவ பிரதேசத்தில் 400 குடும்பங்கள் மற்றும் புஹுலேவெவ பிரதேசத்தில் 600 க்கு அதிகமான குடும்பங்களும் பயனடையும் சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசங்களில் இவ்வகையான நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் தேவை அதிகமாக காணப்படுகிறது. இந்த நாட்களில், கடும் மழை கொண்டு பாதகமான வானிலை போதிலும் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி மக்களுக்கு அடைய வேண்டிய சுத்தமான குடிநீர் வழங்குவதுக்கு கடுமையாக போராடி வருகின்றனர். மேலும் 44நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 16.000க்கு அதிகமான பாடசாலை மாணவர்களும் 23,300 க்கு அதிகமான குடும்பங்களும் நீர் பயனடைகிரது. இது போன்று மேலும் பல சமூக நல திட்டங்களை மேற்கொள்ள கடற்படை உத்தேசித்துள்ளது.