இலங்கை கடற்படையினர் “கடல் பங்குதாரர்களுடன் தொடர்பு திறனை மேம்படுத்துதல்” கருப்பொருளின் கீழ் ஏற்பாடுசெய்யபட்ட “Table top 2016” பயிற்சி திருகோணமலையில்
 

இலங்கை கடற்படையினர் முதல் முறையாக “கடல் பங்குதாரர்களுடன் தொடர்பு திறனை மேம்படுத்துதல்” கருப்பொருளின் கீழ் ஏற்பாடுசெய்யபட்ட “Table top 2016” பயிற்சி நேற்று திருகோணமலை அட்மிரல் கரன்னகொட கலையரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி மற்றும் கடற்படை ஏவுதல் கட்டளை கொடி அதிகாரி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா அவர்கள் கலந்து கொண்டார்.

கடற்படை ஏவுதல் கட்டளை அமைப்பினால் ஏற்பாடுசெய்யபட்ட இப் பயிற்சியில் குறிக்கோள்களாக இந்திய பெருங்கடல் பகுதியில் பன்னாட்டு கடல்சார் அச்சுறுத்தல்கள், கடற் சட்டம் ஐக்கிய நாடுகள் உடன்படிக்கையில், கடலோர காவல்படை நடவடிக்கைகள், கடல் மாசுபாடு மற்றும் தற்போதைய சட்டங்கள் ஆகிய அறிவு விரிவாக்கம்கள் இந் நிகழ்வில் நடைபெற்றது.மேலும் இப் பயிற்சியில் ஏவுதல் கட்டளையில் 40 அதிகாரிகள் மற்றும் வெளி பங்குதாரர்களுக்கும் கடற் சட்டம் ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை மற்றும் பெருங்கடல் மாசடைதல், வாய்ப்புகளை அடிப்படையில் பயிற்சிகள் செய்யப்பட்டுள்ளன.

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார பொது கண்காணிப்பாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார அவர்கள், இலங்கை துறைமுக அதிகாரி சபை பாதுகாப்பு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) நிஸ்ஸங்க விஜேசிங்க அவர்கள், கடலோர காவல்படை துணை இயக்குனர் ஜெனரல் கொமடோர் சுஜீவ பெரேரா அவர்கள், இலங்கை விமானப்படை விண்வெளி மீட்பு ஒருங்கிணைப்பு மையமத்தில் வின் கொமான்டர் வீ எஸ் ஜயக்கொடி அவர்கள், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி திணைக்களம் முகாமைத்துவப் பணிப்பாளர் மார்கஸ் அவர்கள் திருகோணமலை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்விராஜ் அனுர திசாநாயக்க உட்பட ஏவுதல் கட்டளையில் அதிகாரிகளும் இப் பயிற்சிகளில் கலந்துகொன்டன.