இலங்கை கடற்படை கப்பல் “சாகர” கடலோர காவல்படை“தோச்தி XIII” பயிற்சியின் பின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கடலோர காவல்படை“தோச்தி XIII” பயிற்சியில் பங்கேற்ற மாலத்தீவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் “சாகர” இந்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்தது. இந்தியா,மாலத்தீவு மற்றும் இலங்கை கடலோர காவல்படைகள் ஒன்றாக 26 அக்டோபர் 2016 இருந்து 29 அக்டோபர் 2016 வரை 04 தினங்கள் மாலி கடல் கடற்கரையில் சில சிறப்பு பயிற்சிகள் மற்றும் நட்பு வலுப்படுத்தும் திட்டத்தில் 13 ம் முரையாக நடைபெற்ற இப் பயிற்சியில் கடல் கண்காணிப்பு மற்றும் மீட்பு, மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண, கடல் மாசுபாடு தடுப்பு மற்றும் கடற்கொள்ளை தடுப்பு பயிற்சிகலில் கலந்து கொன்டன.
இப் பயிற்சியிகலில் இந்திய கடலோர காவல்படையில் “சமூத்ரபவாக்” மற்றும் “ஆதேஷ்” கப்பல்களும் “டோனியர்” விமானமும் “சேடார்” ஹெலிகாப்டரும், மாலைதீவு கடலோர காவல்படை பிரதிநிதித்துவப்படுத்தி மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையில் “ஹுருவி” மற்றும் “ஷஹிட் அலி” கப்பல்களும் “குரங்கி” ஹெலிகாப்டரும், இலங்கை கடற்படை பிரதிநிதித்துவப்படுத்தி “சாகர” கப்பலும் அதில் கட்டளை அதிகாரி கப்டன் அனுர தனபால உட்பட கப்பல் பட்டறையும் கலந்து கொன்டனர்.