கடற்படையினால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஹம்பேகமுவையில் திறந்து வைப்பு
 

கடற்படையின், விவசாய சமூகங்களிடையே சிறுநீரக நோயை தடுக்கும் சமூக நலத்திட்டத்தின் ஒரு அங்கமாக மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு (RO Plant) நிலையம் மொனராகலை, அலுத்வெவ கனிஷ்ட வித்தியாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊவா மாகாண திட்ட பணிப்பாளர் திரு. ஜகத் புஷ்பகுமார அவர்களால் இன்று (26 ) திறந்து வைக்கப்பட்டது.

சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசங்களில் இவ்வகையான நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் தேவை அதிகமாக காணப்படுகிறது. நாளாந்தம் 5,000 லிட்டர் நீரை சுத்திகரிக்கும் திறனைக்கொண்ட இவ்வியந்திரத்தின் மூலம் 275க்கு அதிகமான அப்பாடசாலையின் மாணவர்களும், 350 க்கு அதிகமான குடும்பங்களும் பயனடையும். கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி நாடளாவ ரீதியில் இது போன்று மேலும் 40 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 16.000க்கு அதிகமான பாடசாலை மாணவர்களும் 22,000 க்கு அதிகமான குடும்பங்களும் நீர் பயனடைகிரது. இது போன்று மேலும் பல சமூக நல திட்டங்களை மேற்கொள்ள கடற்படை உத்தேசித்துள்ளது. மகா சங்க உறுப்பினர்கள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், பாடசாலை அதிபர் ஆர் சூரியாரச்சி,ஆசிரியர்கள்,மாணவர்கள் உட்பட பல பிரதேசவாசிகளும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துக்கொண்டனர்.