27 வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு வடக்கு கடலில் இடம்பெற்றது
 

இலங்கை- இந்தியா கடற்படை மற்றும் கடலோரபாதுகாப்பு படை பிரிவின் முகவர்கள் இடையே 27வது சர்வதேச கடல் எல்லைதொடர்பான வருடாந்த சந்திப்பு இன்று, 21இடம்பெற்றது. இவ்வருடாந்த சந்திப்புகாங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள சர்வதேச கடல் எல்லைப் பிரேதேசத்தில் இந்திய கடற்படை கப்பல் காட்மாட்வில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பங்கெடுக்கும்உள்நாட்டு கடற்படை அதிதிகளுக்கு வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிரியர் அட்மிரல் பியால் டி சில்வா தலைமை தாங்கும் அதேவேளை இந்திய கடற்படைஅதிதிகளுக்கு ரியர் அட்மிரல் அலோக் பட்னகர் தலைமை தாங்குகின்றார்.அத்துடன்இங்கு, ஒத்துழைப்பு, ஒன்றிணைந்த செயற்பாடு மற்றும் கூட்டு முயற்சிஎன்பனவற்றின் ஊடாக படைகளை ஒருங்கிணைத்து பிராந்தியத்தில் செயல்திறன் மிக்ககடல்வழி பாதுகாப்பை நிலைநாட்டுதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்துஆராயப்பட்டதாக கடற்படை தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேலும், இவ்வருடாந்தசர்வதேச கடல் எல்லை தொடர்பான சந்திப்பானது அண்டை நாடுகளின் கடற்படை மற்றும்கடலோரப் பாதுகாப்பு படையினருக்கிடையில் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களைப்பரிமாறி அவற்றினூடாக இப்பிராந்தியத்தில் செயற்பாட்டு செயல்திறனைஅதிகரிப்பதர்கான ஒரு தளமாக அமைகின்றுடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில்நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.