கடற்படையினால் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மெதிரிகிரியில் திறந்து வைப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம் முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக மெதிரிகிரிய,செனரத்புர மற்றும் அபேபுரகம பிரதேச மக்களின் நன்மை கருதி இரன்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (15) திறந்து வைக்கப்பட்டது.
இவ்வியந்திரங்கள் மூலமாக செனரத்புர பிரதேசத்திலுள்ள 300 குடும்பங்கள் மற்றும் அபேபுரகம பிரதேசத்திலுள்ள 420 குடும்பங்களுக்கு நீரை சுத்திகரித்து வழங்கும். இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கொழும்பு, கோல்பேச் ஹோட்டல் நிதியுதவியுடன் கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் நிபணுத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி சிறுநீரக நோய் பரந்தளவில் காணப்படுகின்ற நாட்டின் பல பகுதிகளில் இதுவரை 37 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் சிறுநீரக நோய் தடுக்க எடுக்க வேண்டிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.