திவுலபெலஸ்ஸ மகா வித்தியாலயத்திற்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்பிட்கமைய இலங்கை கடற்படையினரால் பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம் முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக திவுலபெலஸ்ஸ மகா வித்தியாலயத்தில் நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பிரதேசத்தில் வசிக்கும் 350 குடும்பங்கள் மற்றும் அவ்வித்தியாலத்தில் கல்வி பயிலும் 500 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் சுத்தமான குடிநீரைப் பெற முடியும்.
கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நாள்பட்ட சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் முதலுதவியுடன் மூலம் நாடு முழுவதிலும் சுமார் 34 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இந்நிகழ்ச்சி திட்டத்துடன் விவசாய மக்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி ஒன்றும் கடற்படையினால் தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.