கடலில் மூழ்கிய “வாலம்புரி’ பயணிகள் கப்பல் கடற்படையினரால் கண்டுபிடிப்பு
சுளியோடி ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி அக்டோபர் 03 ஆம் (2016) திகதி கடற்படை சுழியோடிகளால் மேட்கோள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக நீரில் மூழ்கடிக்கப்பட்ட பயணிகள் கப்பலான “வாலம்புரி’ யின் சிதைவு, பருத்தித்துறைக்கு வடக்கே 8 கடல் மைல்களுக் கப்பால் 15 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கப்பல் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் வரும் வழியில் பருத்தித்துறைக்கு அப்பால் 1998, பெப்ரவரி 23ஆம் திகதியன்று புலிகளின் தற்கொலை தாக்குதளுக்குள்ளாகி நீரில் மூழ்கியது. இத்தாக்குதலில் இருபத்தொறு கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். கடுமையான கடல் நிலை மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக பின்னர் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் தோல்வியடைந்ததுன.
பல ஆண்டுகளாக கடல்படுக்கையில் இக்கப்பலில் சிதைவு மணலில் மூல்கிய நிலையில் கிடந்துள்ளதுடன் கடல் தாவரங்களால் சூழப்பட்டு மீன்கலின் இனப்பெருக்கத்திற்கு உகந்த ஒரு அமைவிடமகவும் மாறியுள்ளது என்பது குரிப்பிடத்தக்கது.