யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஜனாதிபதியால் திறந்து வைப்பு
அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களால் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நிறுவப்பட்டுள்ள இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் (RO Plant) நேற்று (அக்டோபர் 02) திறந்து வைக்கப்பட்டது. இவ்வியந்திரங்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் தொலைநோக்கு எண்ணக்கருவிற்கமைய கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவினால் உத்பத்தி செய்யப்பட்டு அங்கு நிறுவப்பட்டுள்ளது.
நாள்பட்ட சிறுநீரக நோய் தடுக்கும் ஜனாதிபதி செயலணியின் நிதியுதவியுடன் கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவினால் குறுகிய காலத்திற்குள் இவ்வியந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவை நிறுவப்பட்டுள்ள கட்டிடங்களும் கடற்படையின் பொறியியல் பிரிவினரால் வடக்கு கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவர்களின் வழிகாட்டலில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் 11 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நாள்பட்ட சிறுநீரக நோய் தடுக்கும் ஜனாதிபதி செயலணியின் மக்களுக்கு தூய குடி நீரை பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு நாடலாவா ரீதியில் பல நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவி வருகிறது. மேலும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கு உதவும் விதத்திள் குறைந்த செலவில் இவ்வியந்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு நிறுவப்பட்டு வருகிறது. இதுவரை நாடாலாவ ரீதியில் 32 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிருவப்பட்டுள்ளதுடன் இதுவே யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட முதல் சந்தர்ப்பமும் ஆகும்.
இந்நிகழ்வின் போது மத குருமார், வடமாகான ஆளுநர் கௌ. ரேஜிநோல்ட் குரே, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்நம், போலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர, நாள்பட்ட சிறுநீரக நோய் தடுக்கும் ஜனாதிபதி செயலணியின் செயல்திட்ட பணிப்பாளர் திரு. அசேல இத்தவெல, வடக்கு கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா, சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், அதிதிகள் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.