அவசர சிகிச்சை படகுக்கும் நெடுந்தீவு வைத்தியசாலைக்கும் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு
 

அவசர சிகிச்சை படகு மற்றும் நெடுந்தீவு வைத்தியசாலையின் பாவனைக்காக வேண்டி ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் கடந்த 21ம் திகதியன்று (செப்டம்பர் 2016) நெடுந்தீவு, கடற்படை கப்பல் வாசப வில் நடந்த நிகழ்வொன்றின் போது பிரதேச வைத்திய அதிகாரி திரு. குமாரசாமி பாலச்சந்திரன் அவர்களிடம் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவர்களினால் கையளிக்கப்பட்டன.

பிராந்திய கடற்படை வைத்திய அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க அரச மருத்துவ கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டதுடன். ரூபா. 90,000.00 பெறுமதியான இம்மருத்துவ தொகுதியில் ஒரு இஎன்டி (ENT) உபகரணம், ஒரு இதயத்துடிப்பு மானி, இரத்த அழுத்த மானி, நேபுளைசர், குளுக்கோமீட்டர் உட்பட மற்றும் அவசர சிகிச்சை படகுக்கு அவசியமான பல மருத்துவ பொருட்களும் உள்ளடங்கியிருந்தன. கடந்த வருடம் அக்டோபர் (15) லிருந்து இதுவரை அவசர சிகிச்சை படகு 131 பயணங்களை மேற்கொண்டு 160 நோயாளிகளை அவசர சிகிச்சைக்காக யாழ்பாணம் போதனா வைத்திசாலைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.