அனுராதபுரம் பசவக்குளத்தை சுத்தம் செய்ய கடற்படை உதவி
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்பிட்கமைய மேட்கொள்ளப்படும் கடற்படையின் சமூக நல செயற்பாடுகளின் ஒரு அங்கமாக அநுராதபுரத்திலூள்ள பசவண் குளத்தில் நிறைந்து கிடந்த குப்பைகளை சுத்தம் செய்ய கடற்படை உதவியளித்துள்ளது. வடமத்திய கடற்படை கட்டளை தளபதி கொமொடோர் மெரில் விக்ரமசின்ஹ அவர்களின் மேட்பார்வைன் கீழ் கடற்படை அராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் ஒருங்கிணைபில் கமாண்டர் எந்தணி வீரசின்ஹ வின் தலைமையில் இத்திட்டம் கடந்த 16ம் திகதி (செப்டம்பர்) மேட்கொள்ளப்பட்டது. அத்துடன் கடற்படை அராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு, அநுராதபுரம் புனித நகரல் முறையான கழிவுப்பொருள் அகற்றளுக்காக வேண்டி குப்பை எரியூட்டிகளை அபிவிருத்தி செய்யும் வேலைகளை தற்போது மேட்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக நலத்திட்டங்கலுக்குப் புரம்பாக, கடற்படை அராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் மேட்கொள்ளப்படும் மற்றைய சேவைகள்,
1. சூரிய சக்தியில் இயங்கும் விளக்கு கம்பங்கள் உற்பத்தி
2. காற்றால் இயக்கப்படும் தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள் உற்பத்தி
3 சூரிய சக்தியில் இயங்கும் யானை வேலிகள் அமைத்தல்
4 கடற்படை வளாகங்களில் உயிர்வாயு நிலையங்களை நிறுவல்
5 சூரிய சக்தியில் இயங்கும் நீர் சுத்திகரிப்பு (RO) இயந்திரங்கள் நிறுவல்
6 முறையான கழிவுப்போருல்களை அகற்றுவதற்கான பொறிமுறைகள்