மகா காஷ்யப வித்தியாலய மாணவர்களுக்கு கடற்படை தளபதி காலணிகள் அன்பளிப்பு
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்பிட்கமைய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மகா காஷ்யப வித்தியாலயத்தின் தரம் 1 முதல் 5 வரை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (செப்டம்பர் 19) அப்பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்தின் ஓயாமடுவை யில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கான விடுமுறை விடுதி திறப்பு விழாவிற்காக, ஜுலை 15 திகதி கடற்படை தளபதி சென்ற உலங்கு வானூர்தி மகா காஷ்யப வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் தரையிறக்கப்பட்டது. அவ்வேளை அப்பாடசாலையின் மாணவர்களுக்கு கடற்படை தளபதியை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. இச்சந்தர்ப்பத்தில் அங்கிருந்த பெரும்பாலான மாணவர்கள் காலணிகளின்றி பாடசாலைக்கு வருவதை அறிந்த கடற்படை தளபதி அவர்களுக்கு காலணிகளையும் காலுறைகளையும் வழங்குவதற்கு உறுதிபூண்டார். இதற்கமைய முதலாம் கட்டமாக ஜுலை 28 ம் திகதியும் இரண்டாம் கட்டமாக நேற்றைய (19) தினமும் காலணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கஷ்டப் பிரதேசங்களில் பல இன்னல்களுக்கு மத்தியில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு செய்யப்பட்ட இவ்வுதவிக்காக அப்பாடசாலையின் அதிபரும் ஆசிரியர்களும் கடற்படை தளபதிக்கும் கடற்படைக்கும் தமது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். இந்நற்காரியத்திக்காக பணத்தாலும் வேறு வழிகளிலும் உதவியளித்த கடற்படை வீரர்களுக்கு கடற்படை தளபதி தனது பாராட்தையும் தெரிவித்துள்ளார்.