நீருக்கடியில் வெடிக்காத வெடிபொருள் மீட்பு பயிற்சி திருகோணமலையில் நிறைவு
இலங்கை கடற்படை சுழியோடிகலுக்காக அமெரிக்க கடற்படை வெடிபொருள் அகற்றும் பிரிவு 5 தினால் நடத்தப்பட்ட நீருக்கடியில் வெடிக்காத வெடிபொருள் மீட்பு பயிற்சி 2016 செப்டம்பர் 08 ம் திகதி திருகோணமலையில் வைத்து நிறைவு பெற்றது. ஆகஸ்ட் 22 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பயிட்சி இலங்கை கடற்படை சுழியோடிகலுக்கு தங்களது அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் உதவியாக அமைந்தது.
நிறைவு விழாவின் பிரதம அதிதியாக, கிழக்கு கட்டளை தளபதி ரியர் அட்மிரல் திரவிஸ் சின்னையா அவர்கள் கலந்து சிறப்பித்தார். அமெரிக்க கடற்படை வெடிபொருள் அகற்றும் பிரிவு 5 ன் கட்டளை அதிகாரி கொமாண்டர் பெஞ்சமின் சிபர்லே அவர்களும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு வெற்றிகரமாக பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் பங்கேற்றார். இதே வேளை நீருக்கடியில் வெடிக்காத வெடிபொருள் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் நீருக்கடியில் உபயோகிக்கக்கூடிய கேமரா, ஜிபிஎஸ் கருவி உட்பட மற்றும் பல பொருள்களை அமெரிக்க அதிகாரிகளால் நன்கொடையாக அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பல கிழக்கு கடற்படை பிராந்திய அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்துக்கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக்கொள்ளப்பட்டன.