கெபிதிகொல்லேவையில் கடற்படையினரால் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைப்பு
விவசாய சமூகத்தினரிடையே சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையின் சமூக நலத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கெபிதிகொல்லேவை கோனஹத்தெனவையில் நேற்று (செப்டம்பர் 2), வடமத்திய கடற்படை கட்டளை தளபதி கொமொடோர் மெரில் விக்ரமசிங்ஹ அவர்களால் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
சுத்தமான குடிநீர் வசதியின்றி அவதிப்பட்ட இப்பிரதேச மக்களுக்காக கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் இந்நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடற்படையின் இச் சமூக நல சேவையின் பலனாக விவசாய சமூக மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். இந்நிகழ்வின் போது சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், வீரர்கள் மற்றும் பிரதேச மக்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.