சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 23 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட வேக தாக்குதல் படகுகளான பி 4444 மற்றும் பி 4445 ஆகியவற்றின் வீரர்களால் கொக்குதுடுவை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 2) கைது செய்யப்பட்டார்கள். அவர்களுடன் 4 கண்ணாடியிலை படகுகளும் ஒரு தடுக்கப்பட்ட மீன்பிடி வலையும் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் குச்சவேலி, கடற்படை கப்பல் வாலகம்பாவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் குச்சவெளி பொலிசாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

அதே தினம், வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட கற்பிட்டி, கடற்படை கப்பல் விஜய வின் வீரர்களால் சேருக்குளி கலப்பு பகுதியில் தடுக்கப்பட்ட மீன்பிடி வலைகளை கொண்டு மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்கள் கைது செயயப்பட்டனர். அத்துடன் 5 கண்ணாடியிலை படகுகளும் 6 தடுக்கப்பட்ட மீன்பிடி வலைகளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் புத்தளம் கடற்றொழில் அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.