சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் கடற்படையினரால் கைது
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களின் போது கடற்படையினரால் நேற்று (செப்டம்பர் 1) கைது செய்யப்பட்டார்கள். அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட காங்கேசன்துறை, கடற்படை கப்பல் உத்தர வின் வீரர்களால் பருத்தித்துறை கடற் பிரதேசத்தில் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுழியோடி கடலட்டை பிடித்த 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அச்சந்தற்பத்தில் 2 கண்ணாயிலை படகுகள், 21 ஒட்சிசன் சிலிண்டர்கள், 11 சோடி சுழியோடி காலணிகள் மற்றும் ஒரு ஜிபிஎஸ் கருவி ஆகியனவும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களுடன் கைப்பற்றப்பட்ட பொருள்களும் பருத்தித்துறை கடற்றொழில் அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அதே தினம் செட்டிப்பாளையம் கடல் பிரதேசத்தில் அனுமதியற்ற மீன்பிடி வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 மீனவர்கள் கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட வாகரை, கடற்படை கப்பல் காஷ்யப வின் வீரர்களால் கைது செய்யப்பட்டார்கள். அத்துடன் 2 கண்ணாயிலை படகுகளும் இரண்டு சுருக்கு வலைகளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களும் பொருள்களும் மட்டக்கிளப்பு கடற்றொழில் அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.