சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் வெவ்வேறு இடங்களில் கடற்படையினரால் நேற்று (30) கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய களுவாஞ்சிக்குடி கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை 6 மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய சட்டவிரோத வலைகளும் கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வாகரைப்பிரதேசத்திலுள்ள காஷியப்ப கடற்படை கப்பலின் கடற்படை வீர்ர்களினால் இரு கண்ணாடி இழை படகுகள், இரு தனியிழை மீன்பிடி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைக்காக மட்டக்களப்பு கடற்தொழில் உதவி பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவைளை, கொலங்கனத்த கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 2 மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு கண்ணாடியிழைப் படகுகளும் இரண்டு தனியிழை மீன்பிடி வலைகளும் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட முள்ளிக்குளம் பிரதேசத்திலுள்ள பரன கடற்படை கப்பலின் வீரர்களினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக நடவடிக்கைக்காக புத்தள கடற்தொழில் உதவி பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.