அமெரிக்க கடற்படை கப்பல் ‘யுஎஸ்எஸ் பிரான்க் கேபல்’ கொழும்பு வருகை
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க கடற்படை கப்பல் ‘யுஎஸ்எஸ் பிரான்க் கேபல்’ கொழும்பு துறைமுகத்தை 2016 ஆகஸ்ட் 29ம் திகதி வந்தடைந்தது. வருகை தந்த லேண்ட் வகுப்பை சார்ந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் பாரம்பரிய முறையில் வாரவேட்பளிக்கப்பட்டது. கப்பலின் கட்டளை அதிகாரி, கப்டன் ட்ரிவ் சென். ஜான், மேற்கு கடற்படை கட்டளை பிரதி தளபதி கொமொடோர் செனரத் விஜேசூரிய அவர்களை கொழும்பிலுள்ள மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பின் போது சுமூக கலந்துரையாடளில் ஈடுபட்ட இருவரும் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இங்கு வந்துள்ள ‘யுஎஸ்எஸ் பிரான்க் கேபல்’ இக்காலபகுதியில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள உள்ளது. கப்பலில் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் சிநேகபூர்வ கிரிக்கட், பேஸ்போல் மற்றும் கூடைப்பந்து போட்டிகளிளும் கலந்துக்கொள்ள உள்ளனர். இக்கப்பல் செப்டம்பர் 1ம் திகதி நாட்டை விட்டுச்செல்லும்.