கடற்படையினரால் 30 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

காங்கேசன்துறையிலுள்ள கடற்படை கப்பல் உத்தர, ஊர்காவத்துரையிலுள்ள கடற்படை கப்பல் கான்சதேவ மற்றும் மண்டைதீவிலுள்ள கடற்படை கப்பல் வேலுசுமன ஆகியவற்றின் வீரர்களால், சாவகச்சேரி பிரதேசத்தில் நடத்தப்பட்ட இரு வேறு திடீர் சோதனைகளின் போது 30 கிலோ கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கமைய 20 கிலோ கஞ்சாவை கொண்டு சென்ற ஒருவர் இன்று (ஆகஸ்ட் 26) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேலும் அதே சந்தேக நபரினால் ஒழித்து வைக்கப்பட்டிருந்த மேலும் 10 கிலோ கஞ்சாவும் கண்டுபிடிக்கப்பட்டது. கடற்படையினருக்கு கிடைக்கப்பட்ட தகவல் ஒன்றுக்கமைய பருத்தித்துறை கலால் திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இத்திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.

சந்தேக நபரும் கஞ்சாவும் பருத்தித்துறை கலால் திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்பட்டைக்கப்பட்டுள்ளனர்.