அதிமேதகு ஜனாதிபதி பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்பு
முப்படையை சார்ந்த விளையாட்டு வீரர்களின் திறமைகளை மெருகூட்டும் வகையில் இரு ஆண்டுகளுககு ஒரு முறை நடத்தப்படும் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டி – 2016 நேற்று (ஆகஸ்ட் 22) பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நிறைவு பெற்றது. அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.
நடந்து முடிந்த இவ் 9 ம் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டியில் இலங்கை கடற்படை அணி இரண்டாம் இடத்தை பெற்றது. மார்ச் 24ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்போட்டியில் முப்படையை சார்ந்த பெருமென்னிக்கையான வீர வீராங்கனைகள் பல விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இப்போட்டித் தொடரில் ஆண்களுக்கும் பெண்களுக்குமென 35 தனிப்பட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றதுடன் கடற்படை விளையாட்டு அணி 16 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று 95 தங்கம், 81 வெள்ளி மற்றும் 120 வெண்கல பதக்கங்களை பெற்றுக்கொண்டது..
இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, பாதுகாப்பு படைகளின் பிரதானி எயார் சீப் மார்ஷல் கோளித்த குணதிலக, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சின்ஹல உட்பட பல அதிதிகளும் பங்குகொண்டனர்.