அனுமதி இன்றி கடலட்டை பிடித்த உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட மண்டைதீவு, கடற்படை கப்பல் வேலுசுமன வின் வீரர்களால் மண்டைதீவு, கல்முனை புள்ளிக்கு அப்பால் கடலில் கடலட்டை பிடித்தலில் ஈடுபட்டிருந்த 2 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (ஆகஸ்ட் 22) கைதுசெயயப்பட்டார்கள். அவர்களுடன் 7 கடலைட்டைகளும் 2 சோடி சுளியோடி காலணிகளும் 2 சுழியோடி முகமூடிகளும் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட இரு நபர்களும் பொருள்களும் யாழ்ப்பாணம் கடற்றொழில் அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அதே தினம் வெத்தளைக்கேணி கடற்படை காப்பரனின் வீரர்களால் சாலை கடலில் தக்க அனுமதி பத்திரம் இல்லாமல் கடலட்டை பிடித்த மேலும் 2 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். இவர்களுடன் ஒரு கண்ணாடியிலை படகும், 35 கடலைட்டைகள், ஒரு சோடி சுழியோடும் காலணிகள் மற்றும் ஒரு சுழியோடும் முகமூடியும் கைப்பற்றப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட இருவரும் பொருள்களும் முல்லைதீவு கடற்றொழில் அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.