பங்களாதேஷ் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தூதுக்குழுவினர் கடற்படை தலைமையகத்திற்கு வருகை
 

மேஜேர் ஜெனரல் ஹமிதுர் ரஹ்மான் சௌத்ரி அவர்களின் தலைமையில், பங்களாதேஷ் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் உயர் மட்டக் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்று (16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்திலே வைத்து சந்தித்தது. கடற்படை தளபதியுடனான இச்சந்திப்பின் போது பங்களாதேஷ் தூதுக்குழுவினர் சுமூகமான கலந்துரையாடளில் ஈடுபட்டனர்.

பின்னர் கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசின்ஹ அவர்கள் இலங்கை கடற்படையின் நிறுவனக் கட்டமைப்பில் மற்றும் அதன் செயல்பாட்டு தயார் நிலை சம்பந்தமான ஒரு விரிவான விளக்க உரையொன்றை வழங்கினார். இந்த 23 அங்கத்தவ பங்களாதேஷ் தூதுக்குழு தம் இலங்கை விஜயத்தின் போது நாட்டிலுள்ள பல பாதுகாப்பு படை ஸ்தாபனக்களுக்கு விஜயம் செய்யவுள்ளது. தூதுக்குழுவின் கடற்படை தளபதியுடனான சந்திப்பின் போது கடற்படை தலைமையாக உயரதிகாரிகள் மற்றும் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமொடோர் அஸ்லம் பர்வேஸ் ஆகியோரும் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.