கடற்படையினரால் ஹம்பேகமுவையில் நீர் சத்திகரிப்பு இயந்திரம் நிறுவல்
சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கடற்படையினரால் மேட்கொள்ளப்படும் சமூக சேவைகள் திட்டத்தின் கீழ் ஹம்பேகமுவை விகாரையில் அப்பகுதி மக்களின் உபயோகத்திற்காக கடற்படையினரால் நிறுவப்பட்ட மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று (ஆகஸ்ட் 12) சிறுநீரக நோய் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் செயல்திட்ட பணிப்பாளர் அசேள இத்தவெல அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
கடற்படையின் அராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப திறன் மூலம் நிறுவப்பட்ட இக்கருவி சுத்தமான நீரை பெறுவதில் கஷ்டங்களை எதிர்கொண்ட இப்பிரதேச மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
தனமல்விலை பிரதேச செயலாளர் கெலும் நிஷாந்த, முன்னால் பெருந்தோட்டத்துறை பிரதி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, தென்கிழக்கு கடற்படை பிரதேச பிரதி கட்டளை தளபதி கொமொடோர் சுதத் குருகுலசூரிய உட்பட பல கடற்படை அதிகாரிகளும் பிரதேச மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.