வருடாந்த கடற்படை ரிக்கிங் போட்டி - 2016
கடற்படையின் கப்பல் பிரிவு கட்டளையிடும் கொடி அதிகாரி மற்றும் அலுவலகர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட வருடாந்த கடற்படை ரிக்கிங் (கைற்று திறன்) போட்டி- 2016 திருகோணமலையிலுள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர்கூடத்தில் கடந்த 12திகதி (ஆகஸ்ட் 2016) நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு கப்பல் பிரிவு கட்டளையிடும் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் தயானந்த நானாயக்கார அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். கப்பல் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்குகொண்டனர்.
கப்பல்பணியாளர்ளுக்கு அவசியமான ரிக்கின் தொடர்பான தேர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கமாக கொண்டு இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
முதல் சுற்றில் தெரிவுசெய்யப்பட்ட 8 குழுக்கள் கால் இறுதிச்சுற்று வரை தகுதி பெற்றன. இறுதிச் சுற்றில் கடற்படை கப்பல் சாகர வை பிரதிநிதித்துவப்படுத்திய இரு அணிகள் வெற்றிக்கோப்பைக்காக மோதிக்கொண்டன. பலத்த போட்டிக்குப்பின் கடற்படை கப்பல் சாகர வின் முதலாம் அணி சாம்பியன் விருதை பெற்றதுடன் அதன் மற்றைய அணி இரண்டாம் இடத்தை பெற்றது. முதன்மை கடலோடி ஆர் பி ஜி என் குமாரசிங்கஹ போட்டியின் சிறந்த செயல்திறனாளருக்கான விருதை பெற்றார்.