கடற்படை வரலாற்றின் முதலாம் “கடற்படையின் தலைமை பிரதான சிறு அதிகாரி” நியமனம்
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் எண்ணக்கருவில் கடற்படை வரலாற்றின் முதன் முறையாக “கடற்படையின் தலைமை பிரதான சிறு அதிகாரி” எனும் கடற்படை வீரர்களுக்கான ஒரு புதிய நியமனம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைமை பிரதான சிறு அதிகாரி டி ஜி நீள்கறு (எக்ஸ் எஸ் 15959) கடற்படை வரலாற்றின் முதலாம் “கடற்படையின் தலைமை பிரதான சிறு அதிகாரி” யாக கடற்படை தளபதியால் இன்று (ஆகஸ்ட் 11) நியமனம் பெற்றார். சிரேஸ்ட கடற்படை வீரர்களிருந்து அவர்களின் கடற்படை சேவை பற்றிய கவனமான ஆராய்வின் பின்பே இப்பதவிக்கு மிகத்தகுந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
“கடற்படையின் தலைமை பிரதான சிறு அதிகாரி” கடற்படை வீரர்களின் நலன், பயிற்சி மற்றும் அவர்களின் நிர்வாக விவகாரங்கள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான ஆலோசனைகளும் பரிந்துரைகளும் பணிப்பாளர் நாயகம் பணியாளர் ஊடாக கடற்படை தளபதிக்கு சமர்ப்பிக்க வேண்டப்படுவார். மேலும் உத்தியோகபூர்வ அரச விழாக்கள் மற்றும் நிகழ்வுகளின் போது கடற்படையின் சிரேஸ்ட வீரராகவும் பங்குகொள்ளும் சிறப்புரிமையையும் பெறுவார் என்பது குறிபிடத்தக்கது.