முதலாம் அமெரிக்க - இலங்கை செயல்பாட்டு நிலை இருதரப்பு பாதுகாப்பு உரையாடல்
இலங்கை பாதுகாப்பு படைகளுக்கும் ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு படைகளுக்குமிடையிலான முதலாம் செயல்பாட்டு நிலை இருதரப்பு பாதுகாப்பு கருத்தரங்கு கடந்த 8ம் மற்றும் 9ம் (அகஸ்ட் 2016) தினங்களில் நடத்தப்பட்டது. இத்தொடக்க கருத்தரங்கு இலங்கை கடற்படையின் அனுசரணையில் கடற்படை தலைமையகத்தில் நடத்தப்பட்டது. அமெரிக்காவின் தூதுக்குழு அந்நாட்டின் பசுபிக் கட்டளை மையத்தின் வெவ்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளை கொண்டமைந்திருந்ததுடன் இலங்கையின் தூதுக்குழு முப்படைகள், பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி காரியாலயத்தின் பிரதிநிதிகளை கொண்டதாக அமைந்தது.
இருநாட்டு பாதுகாப்பு படைகளிடையே நடத்தப்படும் இருதரப்பு செயல்பாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கருத்தரங்கு, 2016 தொடக்கம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான உறுதிப்பட்த்தப்பட்ட இருதரப்பு பயிற்சிகள் சம்பந்தமான உறுதியான கால அட்டவணை ஒன்றை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு நடத்தப்பட்டது.